வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்பு
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் ராமேஷ்வரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழக கரையோரத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.பெளர்ணமி, அமாவாசை தினங்களில் கடலலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.இந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு 11 மணியளவில் வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. இதனால் கடல் நீர் பொங்கி ஊருக்குள் புகுந்தது. மேலும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் நீரால்சூழப்பட்டது.
நள்ளிரவில் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டுவெளியே ஓடினார்கள். உடனே அவர்கள் மேடான பகுதிக்கு சென்று தங்கினார்கள்.
விடிய விடிய பயத்துடன் விழித்திருந்த அவர்கள் 2 மணி நேரத்திற்கு பிறகு கடல் நீர் பின் வாங்கியதை தொடர்ந்துதங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
ஆறு காட்டுதுறை, கோடியக்கரை பகுதியிலும் நேற்று கடல் நீர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள்புகுந்தது. வேதாரண்யயேஸ்வரர் கோவில் நாலுகால் மண்டபத்தையும் கடல் நீர் சூழ்ந்தது.
இதை தொடர்ந்து இன்று காலையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. விடிய விடிய மழையும் பெய்து வருவதால்வேதாரண்யம் கடற்கரையோர மக்கள் பீதியாகவே உள்ளனர்.
வேதாரண்யத்தை தொடர்ந்து ராமேஷ்வரத்திலும் பனைமர உயரத்துக்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. சிலஇடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் மீனவ மக்களிடம் அச்சம் நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications