சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி
சென்னை:
சில்லறை பாக்கியைக் கொடுக்காத ஆத்திரத்தில் நடத்துநரின் கையைக் கடித்த பயணியை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை முகப்பேரிலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் நகரப் பேருந்தில் முரளி என்பவர் பயணித்தார்.அந்தப் பேருந்தின் நடத்துனராக மகேஷ் என்பவர் செயல்பட்டார்.அரும்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கினார் முரளி. பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட்டைக் கொடுத்தநடத்துனர் பாக்கி சில்லறையை சிறிது நேரம் கழித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி அவர்தரவில்லை என்று தெரிகிறது.
இதுதொடர்பாக மகேஷுக்கும், முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முரளி,மகேஷின் இடது கையைப் பிடித்து பலமாக கடித்து விட்டார். வலியால் அலறித் துடித்த மகேஷ், பேருந்தை நேராகதிருமங்கலம் காவல் நிலையத்திற்கு விடக் கூறி கதறினார்.
இதையடுத்து பேருந்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்ஸ்பெக்டரிடம் புகார்கொடுத்தார் மகேஷ். இதைத் தொடர்ந்து நடத்துனரின் கையைக் கடித்த முரளி கைது செய்யப்பட்டார்.
40 வயதில் நாய் குணம் என்பார்கள். பயணி முரளிக்கும் 40 வயது தான் ஆகிறதாம். பழமொழியை நீரூபிக்கும்வகையில் அவர் நடந்து கொண்டது பேருந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications