மாநகராட்சி கூட்டம் கராத்தே பங்கேற்பாரா?
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் கராத்தே பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைமறைவாக உள்ள கராத்தேவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கராத்தேவை கைது செய்யநாலு திசைகளிலும் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.ஆனால் அவர் நேபாளத்துக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிமன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அதன்படி இந்த மாதம் கூட்டத்தை கூட்டவேண்டியுள்ளது.
இந்த கூட்டத்தை மேயர் இல்லாததால் யார் கூட்டுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரவை அனுமதி பெற்றுமாநகராட்சி கமிஷனர் கூட்டுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கராத்தே தியாகராஜனே மாநகராட்சி மன்ற கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை ஒரு சிலதினங்களில் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தலைமறைவாக இருப்பதால் மாநகராட்சி மன்ற செயலாளருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி அவர் அறிவிப்பில்மன்ற கூட்டம் கூட்டப்படும் தேதி குறிப்பிடப்படும் என்று தெரிகிறது.
வருகிற 26 அல்லது 28ம் தேதி மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் கராத்தேகலந்து கொள்வாரா என்பது உறுதியாக திெயவில்லை.
கூட்டத்திற்கு வராவிட்டால் மாநகராட்சி மன்ற தலைவர் சுகுமார் பாபு தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும்அதில் கராத்தே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவி பறிக்கப்படும் என்றும் தெரிகிறது.
கராத்தேவின் முன் ஜாமீன் மனு மீதான வழக்கில் 7ம் தேதி நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். அவருக்கு முன் ஜாமீன்கிடைத்தால் மாநகராட்சி மன்ற கூட்டத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications