திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்:
முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்நடைபெறுகிறது.
முருகன் வீரமகேந்திரபுரி என்றழைக்கப்பட்ட திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார். முடிவில் மனம்திருந்திய சூரபத்மனை சேவலும் மயிலுமாக ஆட்கொண்டு வாகனமாக்கி கொண்டார்.சூரன் வதம் நடந்து உதிரம் சிந்தியதால் மண் சிவந்த இவ்வூர் திருச்செந்தூர் எனும் பெயர் பெற்றது.
எனவே மற்ற கோயில்களில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை விட திருச்செந்தூரில் நடைபெறும் விழாமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்துகூடுவது வழக்கம்.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (திங்கள் கிழமை) அதிகாலை 1 மணிக்குஆரம்பிக்கப்பட்டு நடை திறக்கப்படுகிறது.
பிறகு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதிவுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருகிறார். பிற்பகல் 2 மணிக்குபெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் சிவக்கொழுத்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனதுஅசூரபடைகளுடன் வீதிவுலா சென்று கடற்கரையை அடையும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் ரனை வதம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருகிறார்.இங்கு பல உருவங்களுக்கு மாறும் சூரனை ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்திறார்.
இதேபோல் பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கியுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications