சன் டிவி நியூஸ் தப்பு என்கிறார் சென்னை கலெக்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த மேலும் ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்ததாக தவறான, அவதூறான செய்தியைசன் டிவி ஒளிபரப்புவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நிநவாரணப் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற தங்கராஜ் என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து விட்டதாக சன்தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தி அலைவரிசையில் தவறான செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகியுள்ளது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ், வ.உ.சி. நகரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் நிவாரணப் பொருட்களைவாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தார். அங்கு எந்தவிதக் கூட்ட நெரிசலும் ஏற்படவில்லை. மிகவம் அமைதியாக வரிசைசென்று கொண்டிருந்தது.

அப்போது வரிசையில் நின்றிருந்த தங்கராஜுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் கார்த்திக், அருகில் இருந்ததனியார் மருத்துவமனைக்கு தங்கராஜை அழைத்துச் சென்றார். ஆனால் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு அங்குள்ள டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அதற்கு மாறாக அவர் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள டாக்டர்களும், தங்கராஜைஸ்டான்லிக்கே கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் ஸ்டான்லிக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உண்மை இவ்வாறிருக்கதங்கராஜ் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து விட்டதாக பொய்யான, அவதூறான செய்திகளை சன் டிவிசெய்தி பரப்புவதுகண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் கலெக்டர் சந்திரமோகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+