தந்தார் மன்மோகன் சிங்..மறுத்தார் நட்வர் சிங்
டெல்லி:
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நட்வர் சிங் நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலா ஆகியவற்றில் ஒரு துறையைவழங்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வந்தார். ஆனால், அதை ஏற்க நட்வர் மறுத்துவிட்டார்.
வர்த்தகம், எரிசக்தி, அல்லது பெட்ரோலியத்துறை நட்வர் சிங் கோருவதாகத் தெரிகிறது.ஈராக் நாட்டுக்கு உணவுக்கு எண்ணை திட்டத்தை நிறைவேற்றிய போது மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங்ஆதாயம் பெற்றதாக வோல்கர் கமிட்டி ஐநா சபையில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து எழுந்த பிரச்சினையில் அவரிடம் இருந்து வெளியுறவுத்துறை பதவி பறிக்கப்பட்டது. தற்போது இலாகா இல்லாதஅமைச்சராக நட்வர்சிங் இருந்து வருகிறார்.
நட்வரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். ராஜிவ் குடும்பத்துக்கு மிக நெருக்கமானநட்வருக்கு சுற்றுலாத்துறை அல்லது நகர்ப்புற வளர்ச்சித்துறையை வழங்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வந்தார். சுற்றுலாத்துறைஇணையமைச்சராக உள்ள ரேணுகா சவுத்ரியின் மீது அதிருப்தியில் உள்ளார் பிரதமர்.
இதனால் அவருக்கு மேல் ஒரு கேபினட் அமைச்சராக நட்வரை நியமிக்க விரும்புகிறார். ஆனால், தனக்கு சுற்றுலாத்துறை அல்லதுநகர்ப்புற வளர்ச்சி போன்ற முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர விருப்பமில்லை என நட்வர் கூறிவிட்டார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத் தான் நகர்புற வளர்ச்சித்துறையையும் கவனித்து வந்தார்.இப்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காஷ்மீர் மாநில முதலமைச்சராகிவிட்டார். எனவே இந்தத்துறையை நட்வர் சிங்குக்கு தர பிரதமர் விரும்பினார்.
ஆனால், அதை ஏற்க நட்வர் மறுப்பதால் அவருக்கு வர்த்தகம், எரிசக்தி அல்லது பெட்ரோலியத்துறையில் ஏதாவது ஒன்றுவழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் வெளியுறவுத்துறை விட நட்வர் சிங்கிற்கு மனமே இல்லை. எண்ணைக்கு உணவுத்திட்ட ஊழல் விசாரணைமுடிந்ததும் அப் பதவியை மீண்டும் பிடிக்கும் திட்டத்தில் அவர் உள்ளார். இதனால் அந்தத் துறையை பிரதமர் தன் வசமேதொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என கோரி வருகிறார்.
மூத்த தலைவர் என்பதாலும் ராஜிவ் குடும்பத்துக்கு வேண்டியவர் என்பதாலும் நட்வரின் கோரிக்கை ஏற்கப்படும் என்றேதெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications