ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஸன் மீது செருப்பு வீச்சு
சோலாப்பூர்:
ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஸன் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நேற்று திறந்து வைக்க சென்ற போது சிலையை சுதர்ஸன்ம்திறக்கக் கூடாது என்று மராட்டியர்கள் சேவை அமைப்பு, காம்பாஜி பேரவை உள்ளிட்ட சில இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த எதிர்ப்பை மீறி சிவாஜி சிலையை அவர் திறந்து வைத்தார். முன்னதாக எதிர்ப்பு இயக்கங்களை சேர்ந்த 40 பேரைமுன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்திருந்தனர்.
சிலை திறப்பு நடக்கும் இடத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பார்வையாளர்கள்மத்தியிலிருந்த சிலர் திடீரென சுதர்ஸனை நோக்கி செருப்பை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்பு வீசிய நபர்கள் யார் என்று அடையாளம் தெரியாததால், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications