சென்னையில் இன்னொரு ஆதி
சென்னை:
சென்னையில் வெளிநாட்டுக் கடன் வாங்கித் தருவதாக கூறி பஞ்சாப்பைச் சேர்ந்த நபரை ஏமாற்றியதாக ஒருவரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக்கணக்கில் சுருட்டிய சென்னைவியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.இதே பாணியில் பணத்தை சுருட்டி வந்த கொடைக்கானலைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம் போலீஸாரிடம் சிக்கினார்.
இந்த நிலையில் ஆதி கேசவன் பாணியில் பண மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் பத்மநாபன். பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவருக்கு வெளிநாடு வாழ்இந்தியர்களிடமிருந்து ரூ. 5 கோடி கடன் வாங்கி த் தருவதாக கூறி கமிஷன் பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த பஞ்சாப்காரர், சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பத்மநாபனை போலீஸார் இன்று கைது செய்தனர். ஆதிகேசவன் பாணியில் இவரும் கோடிக்கணக்கில் மோசடிசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பத்மநாபனின் கூட்டாளிகளாக கருதப்படும் 4 பேரையும் போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications