சேலம்: பயங்கர வெடி விபத்து- வீடு தரைமட்டம்
சேலம்:
சேலத்தில் தங்கியுள்ள கென்ய நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை பயங்கர குண்டு வெடித்தது. இதில் வீடேதரைமட்டமாகிவிட்டது.
சேலம்-ஏற்காடு சாலையில் கொண்டப்ப நாயக்கன்பட்டி என்ற இடத்தில் முயல் நகர் பகுதியில் டேவிட் ராஜ்குமார் என்பவரின் வீடுஉள்ளது. கோவையில் பள்ளி ஆசிரியராக உள்ள இவரது வீட்டில் கென்யாவைச் சேர்ந்த கிளிபெட் பேடி, பெபி என்ற இருவர் வாடகைக்குக்குடியிருந்தனர். இருவரும் அண்ணன்-தங்கை ஆவர்.இவர்கள் சேலம் விநாயகா பார்மஸி கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் கிளிபெட் கடந்த வாரம் கென்யா திரும்பிவிட்டார். பெபிமட்டும் வீட்டில் இருந்தார். இந் நிலையில் இன்று அதிகாலை இந்த வீட்டில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.
இதில் அந்த வீடே தரைமட்டமாகிவிட்டது. அருகில் இருந்த சில குடிசை வீடுகளும் சிதறிவிட்டன.
முதலில் கேஸ் சிலிண்டெர் வெடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், வீட்டில் இருந்த சிலிண்டெர் அப்படியே உள்ளது. இதனால்வெடித்தது சக்தி வாய்ந்த வெடிகுண்டாகவே இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
எப்படியோ உயிர் தப்பிவிட்ட பெபியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்மஸி படிக்கும் இவர் வெடிக்கும் தன்மைகொண்ட ரசாயனம் எதையும் வீட்டில் வைத்திருந்தாரா அல்லது வெடிகுண்டே வைத்திருந்தாரா என்று விசாரணை நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications