ஜப்பான்: கடலுக்கடியில் மாபெரும் பூகம்பம்- சிறிய சுனாமி தாக்குதல்
டோக்கியோ:
ஜப்பானை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதனால் சிறிய சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதையடுத்து கடலோரப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பசிபிக் கடலுக்கு அடியில் இன்று காலை அந் நாட்டு நேரப்படி 6.39 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில்6.9 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவாகியுள்ளது.இதைத் தொடர்ந்து ஜப்பானின் வடக்குக் கடலோரப் பகுதிகளை சிறிய சுனாமி அலைகள் தாக்கின. இதையடுத்து அந்தப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் ஹோன்சு தீவில் இருந்து 350 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பசிபிக்கடலில் 50 செ.மீ. (சுமார் ஒன்றரை அடி) உயரமான சுனாமி அலைகள் ஏற்பட்டு ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதிகளைத்தாக்கின.
அதே நேரத்தில் ஹோன்சு தீவில் மிக உயரமான அலைகள் தாக்கின. இதுவரை உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டதாக தகவல்ஏதும் இல்லை.
இதற்கு மேல் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என்பதால் வெளியேற்றப்பட்ட மக்கள் ஊர்களுக்குத் திரும்பஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications