வெள்ளச் சேதம்: தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் நாகை மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களை மத்தியக் குழு இன்று பார்வையிட்டது. அவர்களிடம் விவசாயிகள்கண்ணீர் மல்க அழுகிய பயிர்களை காட்டி நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வெள்ளக்காடாக்கியது.

இதில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பெரிதும்பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன.

இந்த வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் மிஸ்ரா தலைமையில் 10 பேர் குழு நேற்றுசென்னை வந்தது.

அவர்கள் நேற்று முதலைமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு 3 பிரிவாகபிரிந்து வெள்ளச் சேத பகுதிகளை இன்று பார்வையிட்டனர்.

அதில் மத்திய உள்துறை இணை செயலாளர் டி.எஸ். மிஸ்ரா தலைமையில், மத்திய புகையிலை வளர்ச்சி இயக்குனர் (பொறுப்பு)டாக்டர் கே. மனோகரன், மத்திய செலவினங்கள் துறை இயக்குனர் ராஜன்குமார், மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறைகண்காணிப்பு இன்ஜினியர் ஜெயச்சந்திரன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை8.15 மணியளவில் திருச்சி வந்தனர்.

அவர்களுடன் தமிழக அரசின் சிறப்பு கமிஷனர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷனர் சந்தானமும் வந்திருந்தார்.

மத்திய குழுவினர் முதலில் ஸ்ரீரங்கம் செட்டித்தோப்பு பகுதியில் காவிரிக்கயிைல் ஏற்பட்ட உடைப்பு பகுதியை பார்வையிட்டனர்.

அதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு ஹெலிகாப்டரில்நாகப்பட்டனம் சேன்று கல்லார் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை பார்வையிட்டனர்.

தண்ணீரில் மூழ்கி கிடந்த பயிர்களை பார்வையிட சென்ற மத்திய குழவிடம் மக்கள் எங்கள் நிலையைப் பாருங்கள், நாங்கள்கடன் வாங்கி விதைத்த பயிர்கள் எல்லாம் இப்படி நாசமடைந்து விட்டன என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

அப்போது உங்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் கிடைக்க பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து காரைக்கால் புறப்பட்டுச் சென்று அங்கு வெள்ளச்சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.

பின்னர் நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம் பாடி, சீர்காழி, தருமைஅடி, அலக்குடி, கொள்ளிடத்தில் வெள்ளச் சேதங்களைபார்வையிடுகிறார்கள். அதை தொடர்ந்து சிதம்பரம் செல்கிறார்கள்.

அதே போல இன்னொரு குழு சென்னையில் தண்டையார் பேட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டனர்.

பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய குழுவினர் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் தமிழகத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசின் நிவாரண உதவிகள் சிறப்பாகவழங்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினார்கள். இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது பற்றி சொன்னார்கள்.

குழவில் இடம்பெற்றுள்ள அனைவரும் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலை 9 மணிக்கு கூடி கலந்து பேசுவோம்.அதன் பிறகு தமிழக அதிகாரிகள் குழுவிடம் ஆலோசனை நடத்துகிறோம். பின்னர் டெல்லி சென்று இறுதி அறிக்கையை தயார்செய்வோம். இன்னும் 10 நாட்களுக்குள் எங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தனர்.

மத்திய அதிகாரிகள் குழுவுடன் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தங்கவேலு, மாநகராட்சி கமிஷனர்விஜயகுமார் உள்பட அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+