நிரம்பும் மேட்டூர்: காவிரியில் வெள்ள அபாயம்
மேட்டூர்:
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி வருகிறது. இந்த ஆண்டில் 4வது முறையாக இந்த அணை நிரம்பவுள்ளது.
வங்கக்கடலில் மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும்பலத்த மழை பெய்து வருகிறது.எனவே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்த ஆண்டில் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.இந்நிலையில் அணை நீர்மட்டம் சனிக்கிழமை குறைந்தது. முழு அளவவான 120 அடியிலிருந்து 119 அடியாக குறைந்தது.
இதற்கிடையில் டெல்டா பாசனத்திற்கு விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அணையின் நீர் மட்டம் நேற்று 119.88 அடியாக உயர்ந்துள்ளது.எனவே இன்றும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை நிரம்பினால் மீண்டும் பெரும் அளவில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால் தஞ்சை, கடலூர், திருவாரூர், திருச்சிஉள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்தப் பகுதிகள் வெள்ளக் காடாயின.
காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் கர்நாடகத்தில் இருந்து இது வரை 178.21 டிஎம்சிதண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை மேட்டூர் அணைக்கு 333.27 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. அதவாவதுகூடுதலாக 155.06 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications