பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி: பணிந்த நிதிஷ்
டெல்லி:
![]() |
நேற்று துணை முதல்வர் பதவியெல்லாம் கிடையாது என மறுத்த நிதிஷ், இன்று பாஜக நெருக்கடியைத் தொடர்ந்து அந்தப்பதவியைக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இன்று முறைப்படி ஐக்கிய ஜனதா தளசட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்படும் நிதிஷ், ஆளுநர் பூட்டாசிங்கை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார்.
நாளை அவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் இரு கட்சிகளையும் சேர்ந்த 14 பேர் கொண்ட அமைச்சரவையும்பதவியேற்கிறது.
முன்னதாக துணை முதல்வர் பதவி வேண்டும் என பாஜக கோரியது. ஆனால், கூட்டணி அமைத்தபோதும் பிரச்சாரத்தின்போதும்துணை முதல்வர் பதவி குறித்து நாம் ஏதும் பேசவில்லையே என்று கூறி அந்தப் பதவியை வழங்க நிதிஷ் மறுத்து வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி சுமார் ஒரு மணி நேரம் நிதிஷ்குமாருடன் ஆலோசனைநடத்தினார். பின்னர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் அவரைச் சந்தித்துப் பேசினர்.
இந் நிலையில் இன்று காலை பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்றார். இதன் பின்னர் நிருபர்களிடம்பேசிய நிதிஷ், துணை முதல்வர் பதவி பாஜவுக்கு வழங்கப்படும் என்றார்.
0.95 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி:
இதற்கிடையே கடந்த தேர்தலை விட இந்த முறை வெறும் 0.95 சதவீத வாக்குகளை மட்டுமே லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அக் கட்சியின் வாக்கு வங்கி அப்படியே இருந்தாலும், கடந்த தேர்தலில் சுயேச்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகள் பெற்றவாக்குகளில் 9.68 சதவீதம் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்குப் போனதால் அந்தக் கூட்டணி வென்றுள்ளது.
இந்த 0.95 வாக்கு சரிவால் லாலு கட்சிக்கு 21 எம்.எல்.ஏக்கள் குறைந்துவிட்டனர். அதே போல அவருடன் கூட்டணி அமைத்தகாங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் 0.95 சதவீத வாக்குகளை இழந்து 29 எம்எல்ஏக்களை இழந்துவிட்டனர்.
இதனால் மொத்தத்தில் இந்தக் கூட்டணிக்கு 50 இடங்கள் நழுவி விட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications