வெள்ளச் சேதம்: பார்வையிட பிரதமர் வராதது ஏன்?- அதிமுக கேள்வி
டெல்லி:
தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் வராததற்கு அதிமுக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 3 முறை கன மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகம் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில் மாநிலத்துக்குபோதிய நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தைக் கிளப்பிய அதிமுக எம்பியான பி.ஜி.நாராயணன், தமிழக வெள்ளச் சேதம் குறித்து மத்தியஅரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. பெரும் சேதத்தை தமிழகம் சந்தித்துள்ள நிலையில் வெள்ளச் சேதத்தை நேரில்பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் வராதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்னொரு அதிமுக எம்பியான தங்கத் தமிழ்செல்வன் பேசுகையில், வெள்ள நிவாரணமாக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ. 3,000கோடி கோரியது. ஆனால், வெறும் ரூ. 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளீர்கள். இது எந்தப் பணிகளுக்கும் உதவாது என்றார்.
இதையடுத்துப் பேசிய திமுக எம்பியான சரத்குமார், காங்கிரஸ் எம்பியான ஜி.கே. வாசன் ஆகியோரும் தமிழகத்துக்குக் கூடுதல்நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்,
வெள்ளத்தால் தென் மாநிலங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மறு கட்டமைப்பு, நிவாரணப் பணிகள்தொடர்பாக முழுமையான விவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம் மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மிக விரைவாக மத்திய அரசு உதவிகளை வழங்கும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உதவிஇடைக்கால நிவாரணம் தான். மாநில அரசுகளின் கோரிக்கைகளை திட்டக் கமிஷன் ஆராய்ந்த பிறகு போதிய அளவுக்கு நிதிதரப்படும்.
மாநில அரசுகள் தரும் வெறும் மனுக்களை மட்டும் வைத்துக் கொண்டு மத்திய அரசால் முழுமையாக உதவிட முடியாது.முறைப்படியான அறிக்கைகள் கிடைத்த பிறகு தாமதமில்லாமல் உதவிகள் வழங்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications