குஷ்பு: நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்
மேட்டூர்:
![]() |
தமிழகப் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப் பேசிய குஷ்புவுக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள்போடப்பட்டுள்ளன. இதில் மேட்டூர் நீதிமன்றம் குஷ்பு நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
ஆனால், உத்தரவை குஷ்பு மதிக்கவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி ஸ்ரீதரன்.இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதற்காக மேட்டூர் வந்த குஷ்புவுக்கு எதிராக துடைப்பம்,செருப்பு போராட்டம் நடந்தது. சில செருப்புகளும் அவர் மீது வீசப்பட்டன.
இந் நிலையில் குஷ்புவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி ஸ்ரீதரனின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், குஷ்பு மீது வீண் பழியின் பேரில் பொய் புகாரைப் பெற்றுக் கொண்டு அவரை இழிவுபடுத்தும் வகையில் பிடிவாரண்ட்பிறப்பித்து வேண்டுமென்றே பத்திரிக்கைகளில் செய்திகளை பிரசுரம் செய்ய வைத்ததற்காக நாங்கள் தண்டனை கொடுக்கதீர்மானித்துள்ளோம்.
எனவே இன்று உங்கள் நீதிமன்றம், காவேரி கிராஸ் பாலம் ஆகிய இடங்களை சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துதகர்க்கவுள்ளோம். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், வாழ்வா அல்லது சாவா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை போலீசாரிடம் நீதிபதி ஒப்படைத்துள்ளார்.கடிதத்தை எழுதியவன் தனது முகவரியாக: இர்பான் கலெக்சன், மாநகராட்சிப் பள்ளி அருகே, அமைந்தகரை, சென்னை-29 என்றுபெயர்- முகவரியைக் குறிப்பிட்டுள்ளார். கடிதம் சென்னை மேற்கு மாம்பலம் தபால் நிலையத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள நீதிபதி ஸ்ரீதரனின் வீடு, நீதிமன்றம், காவேரி பாலம்ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தை அனுப்பியவனை மடக்கும் முயற்சிகளில் க்யூ பிராஞ்ச் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications