மேலும் 24 மணி நேரம் மழை நீடிக்கும்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் வலுவிழந்து விட்டாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:வங்கக் கடலில் சென்னையிலிருந்து கிழக்கு தென் கிழக்கே மையம் கொண்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்து குறைந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி விட்டது. நேற்று அது மேலும் வலுவிழந்தது.
இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும். தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுஎன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 7மாவட்டங்களில் பலத்த மழையும், மிக பலத்த மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்காணப்பட்டாலும் ஒரு சில நேரங்களில் மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications