கொள்ளிடம் இரும்புப் பாலம் உடைந்தது
திருச்சி:
திருச்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்ட இரும்புப் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றின் மீது, சமயபுரம் அருகே டோல்கேட் என்ற இடத்தில் கடந்த 1928ம் ஆண்டு ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக துறையூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட பலஊர்களுக்கு போக்குவரத்து நடந்து வருகிறது.திருச்சியின் முக்கிய போக்குவரத்து பாலமாகவும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சிலவாரங்களாக தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் காரணமாக இரும்புத் தூண்களில் ஒன்றுதுருப்பிடித்து உதிரத் தொடங்கியது.
அதிகாரிகள் இதை சரிவர கவனிக்காத காரணத்தால் துருப்பிடித்து உதிர்ந்த தூண் இன்று முழுமையாக விழுந்தது. இதனால்சுமார் 3 அடி அளவுக்கு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பாலத்தின் வழியாக கனரக வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சேலம், அரியலூர், துறையூர் செல்ல வேண்டிய வாகனங்கள், நகரப் பேருந்துகள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ளஉடைப்பை அதிகாரிகள் விரைவில் சரி செய்யாவிட்டால் பாலம் இரு துண்டாக உடைந்து விழும் ஆபத்து உள்ளதாகபொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் பாலத்தின்கதி அதோ கதிதான் என திருச்சி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications