கருணாநிதிக்கு நாகையில் நக்கல் பேனர்
நாகப்பட்டனம்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட பகுதிகளைப் பார்வையிட திமுக தலைவர் கருணாநிதி வராததை கண்டித்து,நாகையில் விநோதமான போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலைகள் தாக்கியதில்பல்லாயிரக்கணக்கானோர் பலியாயினர். சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை அமெரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் பர்னாலா உள்ளிட்டபல்வேறு தலைவர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.திமுக தலைவர் கருணாநிதி சுனாமி பாதித்த பகுதிகளுக்கு வரவில்லை. இதை சுட்டிக் காட்டி, அவரைக் கண்டித்து நாகையில்விநோதமான பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.யார் அவர் என்ற தலைப்பில அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பில் கிளிண்டன் வந்தார், முதல்வர் ஜெயலலிதா 3 முறைவந்தார், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வந்தார், பர்னாலா வந்தார், ஆனால் ஒரே ஒருவர் மட்டும் இதுவரை ஒருமுறை கூடவரவில்லை. அவர் யார்? அவரைப் பற்றிய சரியான பதிலைத் தருவோருக்கு ரூ. 5000 பரிசுத் தொகை அளிக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான பதிலைத் தந்தால் குலுக்கல் முறையில், பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என அந்த பேனரில்குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமாண்டமான ஜெயலலிதா புகைப்படத்துடன் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதால் அதிமுக சார்பில்இந்த பேனர் வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விநோதமான பேனரால் நாகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, மழை, வெள்ளப் பாதிப்பை பார்வையிடவராத மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யரைக் கண்டித்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications