நிவாரணம்: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யானைப் பசிக்கு சோளப் பொறி போல, தமிழக வெள்ள நிவாரண நிதியாக வெறும் ரூ. 500 கோடியை மட்டும் மத்திய அரசுஒதுக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், தமிழக மழை நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு 13,000கோடி ரூபாயைக் கோரியுள்ளது. ஆனால் மத்திய அரசோ 500 கோடி ரூபாயை மட்டுமே இப்போதைக்கு ஒதுக்கியுள்ளது.இது கண்டனத்துக்குரியது. யானைப் பசிக்கு சோளப் பொறி போல இது உள்ளது. தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியைமத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசை கண்டித்தும், நிவாரண நிதியை வழங்கக் கோரியும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
தமிழக மழை, வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரழிவாக மத்திய அரசு கருத வேண்டும். மழை, வெள்ள நவாரண நிதிதொடர்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை கைவிட்டு தமிழக அரசுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் வரதராஜன்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications