தயாநிதி, அன்புமணியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
டெல்லி:
மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், மற்றும் தயாநிதி மாறனை அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ் டெல்லியில் சந்தித்துபேசினார்.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணியை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவிமெலிண்டா கேட்ஸ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியாவில் பொது சுகாதாரப் பள்ளிகள் நிறுவப்படவேண்டிய அவசியம் பற்றியும், பொது சுகாதார பள்ளிகளை இந்தியாவில் அமைக்க தரப்படும் உதவி பற்றியும் விவாதித்தனர்.மேலும் குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றியும், அதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின்அம்சங்கள் குறித்தும், இலக்குகள் குறித்தும் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.
இதன் பின்னர் இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் பிரச்சினையை தீர்ப்பதற்காக பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைதரும் நிதி உதவிக்கு டாக்டர் அன்புமணி நன்றி தெரிவித்தார்.
தேசிய கொசு நோய் தடுப்பு திட்டம், திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம், தண்ணீரில் பரவும் நோய்கள்தடுப்பு திட்டம் போன்ற பொதுசுகாதார திட்டங்களால் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் குறித்தும் மத்திய அமைச்சர்பில்கேட்சிடம் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி காசநோய், காலரா, எச்ஐவி, நிமோனியா, டைபாய்டு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்புமருந்துகள் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் எடுத்து கூறினார்.
இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் தயாநிதிமாறனை சந்தித்த பில்கேட்ஸ், இந்தியாவும் மைக்ரோ சாப்ட் நிறுவனமும் தொழில்நுட்ப துறையில் இணைந்து செயல்படுவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த ஆலோசனை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியாவில் தற்போது 4,000 பேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதை 7,000 ஆக உயர்த்த கேட்ஸ் முடிவுசெய்துள்ளார்.
இந் நிலையில் தயாநிதி மாறனை பில் கேட்ஸ் இன்றும் சந்தித்து பேசுகிறார்.












Click it and Unblock the Notifications