போலி எப்.ஐ.ஆர்: சிபிஐ விசாரணை கோரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
சென்னை:
போலி எப்.ஐ.ஆர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சுமார் ரூ. 300 கோடி அளவுக்கு பணம் முறைகேடுசெய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
போலி எப்.ஐ. ஆர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தான் இது அதிக அளவில்புழக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட காவல் நிலையங்களிலும்அதிக அளவில் போலி எப்.ஐ.ஆர் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் போலி எப்.ஐ.ஆர் விவகாரம் வெளிக் கிளம்பியதைத் தொடர்ந்து நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ்ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் புலனாய்வுக் குழுவை அமைத்தன.
இந்தக் குழுவின் தலைவர் மாரியப்பன் விசாரணை குறித்துக் கூறுகையில், ஆயிரக்கணக்கான போலி எப்.ஐ.ஆர் மூலம்இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
எங்களது ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் வெளியான தகவல் இது. இன்னும் விசாரணையைத்ை தீவிரப்படுத்தினால் மோசடிசெய்யப்பட்ட பணத்தின் உண்மையான மதிப்பு இதை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பணம் மக்கள் பணமாகும். எனவே இந்த விவகாரத்தை சிபிஐவிசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications