சென்னையில் மழையின் 100 ஆண்டு சாதனை!
சென்னை:
சென்னை நகரில் கடந்த நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அதிகபட்ச வட கிழக்குப் பருவ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த எட்டு ஆண்டுகளாக சரியான மழை இல்லை. இதனால் சென்னை நகரம் கடும் வறட்சியை சந்திக்கநேரிட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் சென்னைவாசிகள் குடத்துடன் தெருத் தெருவாக அலையும்அவலம் ஏற்பட்டது.இதையடுத்தே புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து, வீராணம் ஏரியிலிருந்தும், கொள்ளிடம் ஆற்றிலிருந்தும்தண்ணீரைக் கொண்டு வந்து சென்னை மக்களுக்குக் கொடுத்து தாகம் தீர்க்க உதவியது.
இந் நிலையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய அளவில் தொடர் மழை பெய்து சென்னைவாசிகளைஉண்டு, இல்லை என்றாக்கிவிட்டது.
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழைபெய்துள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் சென்னை நகரில் நேற்று வரை மொத்தம் 247 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் ஒரு சாதனை அளவாகும்.
இதில் வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் மட்டும் 198 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதுவும் கடந்த 100 ஆண்டுகளில்சாதனை அளவாகும்.
கடந்த 1996ம் ஆண்டு 244 செமீ மழை சென்னையில் பெய்தது. அதற்கு முன்பாக 1943ம் ஆண்டு 213 செமீ மழைபதிவாகியுள்ளது.
இதுவே இதுவரை சென்னை நகர மழை சாதனையாக இருந்து வந்தது. தற்போதைய தொடர் மழை இந்த சாதனையைமுறியடித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக நாகப்பட்டனம் மாவட்டத்தில் 198 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து கொடைக்கானலில் 179செமீ மழை பெய்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், இந்த மழை மேலும் பல மழை ரெக்கார்டுகளை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications