சென்னையில் 1,440 ஏக்கரில் புதிய விமான நிலையம்
சென்னை:
சென்னையில் புதிய அதி நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 1,440 ஏக்கர்நிலத்தை தமிழக அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியது.
சென்னை நகரம் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நகர்என்ற பெயரை சென்னை பெற்று வருகிறது. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களது பிரிவுகளை சென்னையில் அமைத்துவருகின்றன.இதுதவிர சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னையில்புதிதாக ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், புதிய சர்வதேச விமானநிலையத்தை அமைக்க தேவைப்படும் நிலத்தை தமிழக அரசு இலவசமாக தந்தால், உடனடியாக புதிய விமான நிலையப்பணிகளைத் தொடங்கி விடுவோம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நிலம் இலவசமாக தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 1,440 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிஇந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இந்த நிலம் தற்போது உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வட பகுதியில் உள்ளது. இதை தன் வசம் எடுத்துக் கொள்ளவிமான நிலைய ஆணையமும் ஒப்புதல் அளித்து விட்டது.
இதைத் தொடர்ந்து விரைவில் புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications