சென்னை ஆறுகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு!
சென்னை:
சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து மீண்டும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு, கூவம்ஆறுகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாலா புயல், நாளை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த 2நாட்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சென்னையின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்குன்றம் ஏரிக்கு வினாடிக்கு 2,100 கனஅடி நீர் வருகிறது, ஏரியிலிருந்து 3,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 4,464 கன அடியும், செம்பரம்பாக்கத்திலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூவம் ஆற்றிலும் அதிக அளவில் நீர்ஓடுகிறது.
இதன் காரணமாக இரண்டு ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடையாற்றின் மேல் அமைந்துள்ள ஆலந்தூர் தரைப்பாலம் நீரில் மூழ்கிவிட்டது.
குன்றத்தூர் பகுதியில் சாலைகளில் தண்ணீர் ஓடத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் இரு ஆறுகளிலும் அதிகஅளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைகளைத் தாண்டி நகருக்குள் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications