மிரட்டல் இ-மெயில்: 9 தனி படைகள் அமைப்பு
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக 9 தனிப் படைகள்அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்தப் படையினர் இன்று 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நெல்லையிலிருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர டெல்லி, சென்னையில் இருந்து வந்த 2தனிப்படையினரும் தீவிர விசாரணை நடத்தினர்.முதல் கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு டெல்லியிலிருந்து வந்த 2 தனிப் படை போலீஸாரும் டெல்லி திரும்பிவிட்டனர்.
விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டிருந்த 14 பேரில் சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் உள்பட 13 பேரைபோலீஸார் விடுவித்து விட்டனர். பிராட்பேண்ட் இன்டர்நெட் மைய பொறியாளர் முத்துராஜ் மட்டும் தொடர்ந்து போலீஸ் வசம்உள்ளார்.
இ-மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் முத்துராஜ் மையத்தில் இருந்துள்ளார். எனவே அவரால்தான் குற்றவாளியை அடையாளம்காட்ட முடியும் என்பதால் அவரிடம் தொடர்ந்து அந்த நபர் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.
இதுவரை முத்துராஜ் கூறிய அடையாளங்களின்படி கம்ப்யூட்டர் மூலம் குற்றவாளியின் படம் வரையப்பட்டுள்ளது. அதிலிருந்துகிடைத்த சில துப்புகளின்படி குறிப்பிட்ட நபரின் செல்போன் எண் கிடைத்துள்ளது. அந்த நபரைப் பிடிக்க போலீஸார் தீவிரமுயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, 16ம் தேதி பிரவுசிங் மையத்திற்கு வந்து போன 50 பேர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 50பேரையும் அழைத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும் என போலீஸார்எதிர்பார்க்கிறார்கள்.
இந் நிலையில் நேற்று இரவும் சீல் வைக்கப்பட்ட இரு இன்டர்நெட் மையங்களிலும் இன்டலிஜென்ஸ் பீரோ பிரிவு போலீசார்விடிய விடிய சோதனை நடத்தினர். அந்த மையத்திலிருந்து 16ம் தேதி அனுப்பப்பட்ட மெயில்களின் பட்டியல்களை போலீசார்திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே தனிப்படை போலீசார் இன்று மேலும் 2 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் யார் என்பது குறித்ததகவல்கள் வெளியிடப்படவில்லை. குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவர் என்றும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications