சுனாமி: நாகை மக்களுக்கு அமிர்த்தானந்தமயி வழங்கிய வீடுகள்
நாகப்பட்டினம்:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகையில் மாதா அமிர்த்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்ட 374 வீடுகளின்சாவிகளை மாதா அமிர்த்தானந்த மயி மாவட்டக் கலெக்டரிடம் வழங்கினார்.
மாதா அமிர்த்தானந்தமயி தனது மடத்தின் சார்பில் ரூ. 6.55 கோடி செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட செம்மன்தன்பட்டி,அக்கரைப்பட்டி, பண்டகசாலை அகிய கிராம மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.மேலும் இந்த இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, கழிவு நீர் கால்வாய்கள், சமுதாய கூடம், குழந்தைகள் காப்பகம்ஆகிய வசதிகளையும் செய்து தந்துள்ளார்.
இந்த கட்டிடங்களுக்கான சாவியை நேற்று நாகையில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் மாதாஅமிர்த்தானந்தமயி ஒப்படைத்தார். கிராம மக்களின் சார்பாக மாவட்ட கலெக்டர் அந்த சாவிகளை பெற்றுக் கொண்டார். மேலும்பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் கேரள மாநில மக்களுக்காக தாம் கட்டியுள்ள சுமார் 1,500 வீடுகளின் சாவிகளையும் கலெக்டரிடம்ஒப்படைத்தார்.
இது குறித்து அமிர்த்தானந்த மயி கூறும் போது எங்கள் மடம் சார்பில் நாகை மாவட்டத்தில் மட்டும் மேலும் 1,950 வீடுகள் கட்டித்தருவதற்கு திட்டம் வைத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து கலெக்டர் பேசுகையில், மாநில அரசு ரூ. 180 கோடி நிதி நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம்அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 17,461 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டி கொடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications