42 பலிகள்: நெருக்கடியில் மாநகராட்சி கமிஷ்னர்
சென்னை:
எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் இறந்தது தொடர்பாக மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டி சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்றுதுணை மேயர் கராத்தே தியாகராஜனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களும் சென்னை மாநகராட்சி ஆணையர்விஜயக்குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தச் சம்பவத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் அஜாக்கிரதையான போக்கே காரணம் எனஎதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தப் பரிதாபச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், தியாகராய நகர் துணை ஆணையர் ஆகியோர்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே இந்த சோகச் சம்பவம்நடந்தேறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள தலைமறைவாக உள்ள துணை மேயர் கராத்தே தியாகராஜன், இதுதொடர்பாகமாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
வரும் 26ம் தேதி மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு உத்தரவிட்டு மாநகராட்சி ஆணையருக்கு அவர் கடிதம்அனுப்பியுள்ளார். ஆனால் கராத்தே தியாகராஜன் பெயரில் வந்துள்ள கடிதத்தில், அவரது கையெழுத்து இல்லாத காரணத்தால்,அக்கோரிக்கைப்படி கூட்டத்தைக் கூட்ட முடியாது என்று மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் கதை விட்டுள்ளார்.
இந் நிலையில், மாமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கோரி திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக தலைமையில் மாநகராட்சி எதிர்க் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சியின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ள நிவாரண நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்துள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையில் மாமன்றக் கூட்டத்தைக் கூட்டி,வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். துணை மேயர்இல்லாத நிலையில் கடந்த நவம்பர் 21ம் தேதி மாநகராட்சிக் கூட்டத்தை ஆணையர் கூட்டினார்.
அதே அடிப்படையில் இப்போதும் மாமன்றக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
ஆணையர் விஜயக்குமாரை திமுக எதிர்க்கட்சித் தலைவர் சி.வி.மலையன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ ஆகியோர்நேரில் சந்தித்தும் மாநகராட்சியைக் கூட்டுமாறு மனு கொடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications