ஜெயேந்திரருக்கு சென்னை கோர்ட் கடும் கண்டனம்
சென்னை:
நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜெயேந்திரருக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தவழக்கை புதுவைக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இந் நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர், சுந்தரசே அய்யர், ரகு ஆகியோர்ஆஜராகவில்லை. இவர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதிசெல்வக்குமாரிடம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உடல் நலம் சரியில்லாததாலும், மழை காரணமாகவும் ஜெயேந்திரர் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் மனுவில்கூறியிருந்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயேந்திரருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டஜெயேந்திரரின் வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தற்போது சம்பிரதாயத்திற்குத்தான் விசாரணை நடந்து வருகிறது. எனவே ஜெயேந்திரர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லைஎன்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த நீதிபதி, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவைஇப்போதே ரத்து செய்து விட்டு விசாரணையைத் தொடங்க உத்தரவிட நேரிடும்.
சரியான காரணங்களைக் கூறாமலும், நீதிமன்றத்திற்கு வராமலும் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று கோபத்துடன் கூறினார்.இதைத் தொடர்ந்து ஜெயேந்திரரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். மேலும், அடுத்த முறை கண்டிப்பாகஜெயேந்திரர் நேரில் ஆஜராவார் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணையை வரும் ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் கண்டிப்பாக ஜெயேந்திரர் நேரில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதேபோல, சுந்தரேச அய்யர், ரகு ஆகியோரது வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகண்டனம் தெரிவித்து அவர்களது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications