கிறிஸ்தவ சர்ச்சுகளில் அன்னதானம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் 7 கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தினம் முதல் இலவச அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் திருக்கோவில் அன்னதானத் திட்டத்தின்மூலம் 180 கோவில்களில் அன்னதானத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல, 12 இஸ்லாமிய தர்ஹாக்களில் வெள்ளிதோறும் இலவச அன்னதானத் திட்டம் அமலில் உள்ளது. தற்போதுஇத்திட்டத்தை விரிவுபடுத்தி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இதன் படி மாநில சிறுபான்மை ஆணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாநில சிறுபான்மை ஆணையத்தின் சார்பில்பதிவு பெற்ற அறக்கட்டளை இதற்காக தொடங்கப்படும். சிறுபான்மை ஆணைய தலைவரே, அறக்கட்டளைத் தலைவராகஇருப்பார்.
ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்கள், அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளாக செயல்படுவர். இந்த அறக்கட்டளைக்கு மூலநிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்கப்படும்.
அறக்கட்டளைக்குத் தேவையான பிற நிதி நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும். இத்திட்டத்தை சென்னை அண்ணா நகர்சிஸ்வா பிரார்த்தனை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் தொடங்கி வைக்கிறேன்.
இதே நேரத்தில், கோவை போத்தனூர் பி.எஸ்.கிறிஸ்டோபர் தென்னிந்திய தேவாலயம், குனியத்தூர் சிஸ்வா தேவாலயம்,நாமக்கல் ரோமன் தேவாலயம், மதுரை ஆரப்பாளயம் புதுவாழ்வு திருச்சபை தேவாலயம், தேனி சங்கராபுரம் சிஸ்வாதேவாலயம், ஈரோடு மாணிக்கம்பாளையம் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டம் படிப்படியாக மேலும் பல வழிபாட்டுத் தலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications