நெஞ்சை கனக்க வைத்த கடலூர் மீனவர் குப்பங்கள்
கடலூர்:
சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக கடலூர் மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில்ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலங்கள், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலைகள் நடத்திய கோரத் தாண்டவத்தில், பல்லாயிரக்கணக்கானோர்உயிரிழந்தனர்.
சுனாமி தாக்குதலுக்கு ஆளான கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மெளன ஊர்வலங்கள், கண்ணீர்அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சுனாமிக்குப் பலியான மீனவர்களின் வீடுகள் முன்பு அவர்களது உருவப் படங்கள் வைக்கப்பட்டு அவற்றிற்கு மாலைகள்அணிவிக்கப்பட்டிருந்தன. பலர் அய்யர்களை வைத்து திதியும் கொடுத்தனர். மீனவர் குடியிருப்புகள் முழுவதும் கண்ணீரும்,கம்பலையுமாக காணப்படுகிறது.
கீச்சாங்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுவை அரசு சார்பில் பாண்டிச்சேரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
ஜெ வெளியிட்ட நிவாரணப் பணி நூல்:
இதற்கிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள்குறித்த விளக்க நூலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகளை விளக்கி வருவாய்த்துறை சார்பில் நூல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டைடிங் ஓவர் சுனாமி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நூலை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில்வெளியிட்டார். முதல் பிரதியை வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் சுனாமியால் இடிந்து போன, கன்னியாகுமரி மாவட்டம் மேல மணல்குடி, கீழ மணல்குடி கிராமங்களைஇணைக்கும் பாலத்திற்குப் பதில் புதிய பாலத்தை கட்டுவதற்கான அடிக்கல்லையும் ஜெயலலிதா சென்னை கோட்டையில் திறந்துவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications