தம்பி எங்கே?: தேடித் தவிக்கும் சிறுவன்
உதகமண்டலம்:
![]() |
| காணாமல் போன தல்ஹா |
சுனாமி தாக்குதலில் மீட்கப்பட்டு பின்னர் தொலைந்து போன தனது தம்பியைத் தேடி ஊட்டியைச் சேர்ந்த சிறுவன் விடும்கண்ணீரைப் பார்த்து உதகையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் சுனாமி ஏற்படுத்திய சோக வடு, பல்லாயிரக்கணக்கான உள்ளங்களை இன்னும் கூட வதைத்துக்கொண்டுதான் உள்ளது. இந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் எத்தனையோ பேர் இன்னும் சோகத்தில் உழன்று கொண்டுள்ளனர்.
அவர்களில் ஒருவன்தான் உதகையைச் சேர்ந்த தன்வீர். இந்த சிறுவன் கடந்த ஆண்டு இதே நாளில் தனது தந்தை சைபுல்லா,தாயார் பர்வீன், 2 தம்பிகளுடன் புதுவை மற்றும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றிருந்தான்.
அம்மா, அப்பா, தம்பிகளுடன் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் கிராமத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தபோது தான் கோர சுனாமி தனது தாக்குதலைத் தொடர்ந்தது. சுனாமி பேரலையில் சிக்கி தன்வீரின் தந்தை, தாயார்,ஒரு தம்பி ஆகியோர் மாய்ந்து போயினர்.
தன்வீர் அலையின் தாக்குதலில் தூக்கி வீசப்பட்டு ஒரு சுவரில் மோதி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். கடைசித்தம்பியான தல்ஹாவை, காருக்குள் வைத்து விட்டு இவர்கள் கடற்கரையில் இருந்ததால், அந்த சிறுவனும் உயிர் தப்பினான்.
காருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தல்ஹாவை, கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மீட்டு, ஒரு காப்பகத்தில்ஒப்படைத்தார். ஆனால், யாரோ ஒரு பெண் தனது மகன் என்று சொல்லிக் கேட்டார் என்று அந்த பச்சிளம் சிறுவனை அவரிடம்கொடுத்து விட்டனர் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள்.
தாய், தந்தை, தம்பியை இழந்த தன்வீர், தனது அன்பான தல்ஹாவை எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில்கண்ணீருடன் கடலூர் மாவட்டத்தில் சில நாட்கள் உறவினர்களுடன் சுற்றித் திரிந்தான். ஆனால் கண்ணீர்தான் வற்றியதே தவிரதல்ஹா எங்கே போனான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.விரக்தியின் உச்சத்திற்கேப் போய் விட்ட தன்வீரின் பெயப்பாவும், உறவினர்களும் வேறு வழியின்றி ஊட்டிக்குத்திரும்பிவிட்டனர். ஊருக்குத் திரும்பியும் கூடதல்ஹாவை மறக்க முடியவில்லை அண்ணனான தன்வீரால்.
தனது அன்புத் தம்பியை நினைத்து தினசரி கண்ணீர் விட்டு அழுகிறான் தன்வீர். தம்பியை நினைத்துப் படம் வரைகிறான்,கவிதைகள் எழுதுகிறான், ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல, நோட்டுப் புத்தகத்தில் அன்புத் தம்பியே திரும்பி வா என்று எழுதிக்கொண்டிருக்கிறான், சரியாக சாப்பிடுவதில்லை, பாதித் தூக்கத்தில் எழுந்து தம்பியைத் தேடி அழுகிறான்.
காணாமல் போய் விட்ட தல்ஹா திரும்பி வர வேண்டும் இல்லாவிட்டால் காலம்தான் தன்வீரை ஆறுதல் படுத்த வேண்டும்.













Click it and Unblock the Notifications