சர்ச்சுகளில் அன்னதானம்: பிஷப்புகள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தமிழக அரசு கிறிஸ்துமஸ் தினம் முதல் அறிமுகப்படுத்தியுள்ள தேவாலயங்களில் அன்னதானத் திட்டத்திற்கு கிறிஸ்தவபேராயர்கள் (பிஷப்புகள்) கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கவுன்சில் தலைவர் டாக்டர் பீட்டர் பெர்னாண்டோ, சென்னை-மயிலாப்பூர் மண்டல ஆர்ச்பிஷப் டாக்டர்சின்னப்பா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இலவச உணவு வழங்குவது கிறிஸ்துவ மதத்தில் இல்லாத ஒரு பழக்கம்.

அதில் கிறிஸ்துவத்திற்கு நம்பிக்கையும் இல்லை. இருப்பினும் ஆண்டுக்கு சிலமுறை விருந்து நிகழ்ச்சிகளுக்கு கிறிஸ்துவர்கள்ஏற்பாடு செய்வது வழக்கம். அதை விடுத்து, ஆண்டின் அத்தனை நாட்களிலும் இலவச உணவு வழங்குவது, அதுவும அரசின்செலவில் உணவு தருவது என்பது கிறிஸ்துவ மதத்தில் இதுவரை இல்லாத ஒரு வழக்கமாகும்.

தேவாலயங்கள் புனிதத்தன்மை கொண்டவை. அங்கு இப்படி இலவச உணவு வழங்குவது தேவாலயங்களின் புனிதத்தைப்பாதிப்பதாக அமையும். சாப்பிடுவதற்காக மட்டுமே பக்தர்கள் தேவாலயங்களுக்கு வர ஆரம்பித்தால் உண்மையான பக்திபாதிக்கப்படும்.

இலவச உணவு வழங்குவதை விட வேறு பல வழிகளில் கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவலாம். 1991ம் ஆண்டுக்குப் பிறகு பலதமிழ்ப் பள்ளிகளை தேவாலயங்கள் ஆரம்பித்தன. ஆனால் அவற்றிற்கு போதிய நிதியுதவி இல்லாமல் நொடிந்த நிலையில்உள்ளன. கிட்டத்தட்ட 200 பள்ளிகள் இவ்வாறு தவிக்கின்றன. அவற்றிற்கு அரசு நதியுதவி அளிக்கலாம்.

இதுதவிர கிறிஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள், பள்ளிகளுக்கு உணவுதானியங்களை வழங்கலாம், நிதியுதவி அளிக்கலாம், தேவைப்படும் பிற பொருட்களை வழங்கலாம். இதன் மூலம்உண்மையிலேயே ஏழை, எளிய கிறிஸ்துவ மக்கள் பலன் அடைவர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+