திருச்சியில் மார்ச்சில் திமுக மாநில மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சியில் மார்ச் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் திமுகவின் 9வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமைக் கழகம்அறிவித்துள்ளது.திமுக தலைமைக் கழக அலுலவகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் மு.க.ஸ்டாலின்,பரிதி இளம்வழுதி, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மத்தியஅமைச்சர் ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் மார்ச் 3,4, 5 ஆகிய தேதிகளில் திருச்சியில் 9வது மாநில மாநாட்டை நடத்துவது எனவும், அதில்ஒரு நாள், இளைஞர் அணியின் வெள்ளி விழாவை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டதாக திமுக வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications