கட்சி விதியில் மாற்றம்: விஜயகாந்த் விண்ணப்பம்
டெல்லி:
தனது புதிய கட்சியை பதிவு செய்யக் கோரி மீண்டும் தேர்தல் கமிஷனில் நடிகர் விஜயகாந்த் கட்சி விதிமுறைகளில் உரியமாற்றங்களை செய்து புதிதாக விண்ணப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் புதிய கட்சியை நடிகர் விஜயகாந்த் துவக்கி மதுரையில் பிரமாண்டமாகமாநாடு ஒன்றையும் நடத்திக் காட்டினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.புதிதாக துவங்கப்படும் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் கமிஷனில் முதலில் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் கமிஷனில்பதிவு செய்யப்பட்ட பிறகே அந்தக் கட்சி தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டது என்கிற அந்தஸ்து கிடைக்கும்.
தனது புதிய கட்சியையும் பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு விஜயகாந்த் சென்றார். அங்கு பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தையும் அளித்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தேர்தல் கமிஷன், கட்சியை பதிவு செய்யமறுத்து விட்டது.
கட்சியின் சட்ட திட்டத்தில், அனைத்து விஷயங்களுக்கும் தலைவர் முடிவெடுப்பார் என்று உள்ளதால் ஜனநாயக நெறிமுறைக்குஅது உகந்ததாக இல்லை என்று தேர்தல் கமிஷனில் காரணம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றியமைத்தால் மட்டுமே தேர்தல் கமிஷனில் கட்சியைபதிவு செய்ய முடியும். எனவே, தனது கட்சியின் சட்ட திட்டங்களில் உரிய மாற்றங்களை கொண்டு வந்து தேர்தல் கமிஷனில்நடிகர் விஜயகாந்த் புதிதாக விண்ணப்பம் செய்துள்ளார்.
ஏற்கனவே சுட்டிக் காட்டிய குறைபாடுகள் களையப்பட்டு புதிதாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல்கமிஷனின் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இடம்பெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications