சாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், சபரிமலைக்கு சென்றனர். அங்கு வழிபாட்டை முடித்துவிட்டு டாடா சுமோ காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.ஆலங்குளம் அருகே அவர்கது வாகனம் வந்தபோது தென்காசியை நோக்கிச் சென்ற ஒரு லாரி எதிரே வந்து பயங்கரமாகமோதியது. இதில் காரில் பயணித்த பிரபு, சத்யநாராயணன், ஹர்ஷத் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 4பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications