விஜயகாந்த் கல்யாண மண்டபம் இடிக்கப்படும்: டி.ஆர்.பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேம்பாலம் கட்ட இடையூறாக உள்ள விஜகாந்த்துக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை இடிப்பதில் எந்தவித மாற்றமும்இல்லை என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சர்வதேசதரத்துடன் கூடிய பிரமாண்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள், வீடுகள்இடிக்கப்படுகின்றன. இதற்கான இழப்பீட்டுத் தொகையை தேசிய நெடுஞ்சாலைத்துறை வழங்க முன் வந்துள்ளது.

கோயம்பேடு ரவுண்டானா அருகே உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் கல்யாண மண்டபம் உள்ளது.மேம்பாலத்துக்கா இந்த மண்டபத்தையும் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நாட்டுக்காகவே வாழ்வதாகக் கூறும்விஜயகாந்த் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

திடீரென திமுக தலைவர் கருணாநிதியைப் போய் பார்த்து மண்டபத்தை காக்க முனைந்தார். ஆனால், தன்னால் உதவ முடியாதுஎன்று கருணாநிதி கூறிவிட்டதைத் தொடர்ந்து, சும்மா தான் அவரைப் பார்க்கப் போனேன் என்று பீலா விட்டார் விஜய்காந்த்.

இப்போது திமுகவை குறி வைத்து அவர் தாக்கிப் பேசி வருவதற்குக் கூட பாலத்தால் தன் மண்டபம் இடிக்கப்படுவதும் ஒருகாரணம் என்கிறார்கள்.

இந் நிவையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியவாது:

மேம்பாலம் கட்டும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. கட்டடங்களை அப்புறப்படுத்திய பிறகு பணிகள் தொடங்கும்.விஜயகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர். அவரும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். எனவே இந்தப் பிரச்சினையைபெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை செப்பனிட 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசிடம்இருந்து திட்ட மதிப்பீடு வந்ததும் மத்திய அரசு பணம் ஒதுக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+