For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தையின் நுரையீரலில் நுழைந்த சேப்டி பின்: அகற்றி அரசு மருத்துவமனை சாதனை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

X-Ray Report - Safety Pin found in Lungs
குழந்தையின் நுரையீரலில் சேப்டி பின்
சேலத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் நுரையீரலில் சிக்கிய சேப்டி பின்னை பைபர் ஆப்டிக் பிராங்கோஸ்கோபி கருவியின்உதவியால் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.

சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்குகவுரி(வயது 3), கவுதம்( வயது 1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, கவுதம் சேப்டி பின்னை வாயில் வைத்து விழுங்கி விட்டான்.

குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டதை பார்த்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். குழந்தையை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது சேப்டி பின் குழந்தையின் உணவுக் குழலில்சிக்கியிருப்பதாகவும் உடனே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

Child with his father after the surgery
அறுவை சிகிச்சைக்குப் பின் தந்தையுடன் குழந்தை
கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சோதனை மேற்கொண்டதில், சேப்டி பின் மூச்சுக் குழல் வழியாக சென்றுநுரையீரலுக்குச் செல்லும் வலது கிளையில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

கோவை அரசு மருத்துவமனை டீன் கலாநிதி ஆலோசனையை அடுத்து, காது மூக்கு தொண்டை துறைத் தலைவர் காளியண்ணன்,நிபுணர் டாக்டர் அரவிந்தன், டாக்டர் கல்யாணராமன் ஆகியோர் குழந்தையின் நுரையீரல் அருகே இருந்த சேப்டி பின்னை பைபர்ஆப்டிக் பிராங்கோஸ்கோபி கருவியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.

தற்போது குழந்தை கவுதம் நல்ல உடல் நிலையுடன் சாதாரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X