தேர்தல் தேதி: பி.பி. டான்டன் தமிழகம் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதியை இறுதி செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.தாண்டன் அடுத்த வாரம்சென்னை வருகிறார். தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்த பூர்வாங்க ஆலோசனைகள் இன்று டெல்லியில் தொடங்கின. இக் கூட்டத்தில் தேர்தல்தேதி குறித்து 3 தேர்தல் ஆணையர்களும் விவாதிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் தாண்டன் தமிழகம் வருகிறார். அடுத்த வாரம் அவர் சென்னைக்கு வரவுள்ளார்.சென்னை வரும் அவர் மதுரை மற்றும் கோவையிலும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

9ம் தேதி கோவையிலும், 10ம் தேதி மதுரையிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டசபைத்தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே வாக்காளர் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அடையாளஅட்டை இல்லாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்தலுக்கு முன் அட்டையைப் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+