ஹஜ் அலுவலகத்தை தாக்கிய இந்திய பயணிகள்
துபாய்:
மெக்காவில் தங்க வைக்கப்பட்ட இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் குழுவினருக்கு 3 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால்கடுப்படைந்த யாத்ரீகர்கள் அங்குள்ள இந்திய ஹஜ் கமிட்டியின் அலுவலகத்தைத் தாக்கினர்.
மெக்காவில் உள்ள அஸீசியா என்ற கட்டிடத்தில் இந்தியாவில் இருந்து சென்ற ஹஜ் புனிதப் பயணிகள் தங்கியுள்ளனர். இந்தக்கட்டடத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லை. இது தொடர்பாக அங்கிருந்த இந்திய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.ஆனால் அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ஹஜ் கிளைஅலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.
இது குறித்து செளதியில் உள்ள இந்தியத் தூதரத்தின் ஜெனரல் டாக்டர் யூசுப் சயீத் கூறுகையில்,
இந்திய ஹஜ் பயணிகள் தங்கியிருந்த கட்டிடத்தில் தண்ணீர் சப்ளை செய்யும் மோட்டர் பழுதடைந்து விட்டது. எனவே கட்டிடஉரிமையாளர் வேறொரு மோட்டரை ஏற்பாடு செய்தார். அதுவும் பழுதடைந்து விட்ட நிலையில், டேங்கர் லாரிகள் மூலம்தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
11ம் தேதி பக்ரீத்:
இதற்கிடையே பக்ரீத் பண்டியை வரும் 11ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி டாக்டர் சலாவூதீன்முகம்மத் அயூப் தெரிவித்துள்ளார்.
நேற்று பிறை தென்பட்டதையடுத்து 11ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications