வரும்18 முதல் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை திமுக கூட்டணி தொடங்குகிறது.

தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக மேற்கொள்ள அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்கக்கோரியும், தமிழக அரசின் பொறுப்பற்றதனமான போக்கைக் கண்டித்தும் சென்னையில் சமீபத்தில் கண்டன பொதுக் கூட்டம்மற்றும் தமிழக அளவில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.

இந் நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்க கருணாநிதி தலைமையில் இன்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்கூடி ஆலோசனை நடத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டகூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மக்கள் விரோத, சர்வாதிகார, ஜனநாயக விரோத அதிமுகஆட்சியை அகற்ற வரும் 18ம் தேதி முதல் எங்கள் கூட்டணியின் பிரசார இயக்கம் தொடங்குகிறது.

ஜெயலலிதா ஆட்சியை அகற்றும் வரை இந்த பிரசார இயக்கம் தொடரும். தெருமுனைப் பிரசாரங்கள், கூட்டங்கள் என பல்வேறுகட்டங்களாக இந்தப் போராட்டம் நடைபெறும்.

சட்டசபைத் தொகுதி இடங்கள் பகிர்வு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்றார்கருணாநிதி.

இலங்கைக்கு இந்திய அரசு எந்தவித ராணுவ ஒத்துழைப்பும் வழங்கக் கூடாது என்று பிரதமருக்கு, பாமக மற்றும் மதிமகஆகியவை வலியுறுத்தியுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, இரு கட்சிகளின் வலியுறுத்தலை பிரதமர் புறக்கணிக்க மாட்டார்என்றே நானும் நினைக்கிறேன்.

வெளியுறவு விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக ஆதரிக்கிறது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்அவர்கள் எந்த வகையிலும் இன்னலுக்கு ஆளாகி விடாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

18ம் தேதி முதல் தொடங்கவுள்ள பிரச்சார இயக்கம் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக கூட்டணிதொடங்குவதாகவே கருதப்படுகிறது.

திருச்சியில் மார்ச் 3ம் தேதி தொடங்கும் திமுக மாநாட்டில் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்றும் கருணாநிதிதெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+