தேர்தலுக்கு பின் நாங்கள்தான் நம்பர் 2: பாமக
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின் 2வது பெரிய கட்சியாக பாமக உருவெடுக்கும் என்று அக்கட்சியின்எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், தற்போது தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக பாமக உள்ளது. சட்டசபைத்தேர்தலுக்குப் பிறகு 2வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். தனது தோழமைக் கட்சிகளுடன் பாமகவுக்கு நல்லுறவு நீடிக்கிறது.
வட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்திற்காக மட்டும் பாமக தீவிரமாக உழைப்பதாக தவறான எண்ணம் உள்ளது.இதைத் தவிடுபொடியாக்கும் வகையில், தென் மாவட்டங்களிலும் இந்த முறை அதிக தொகுதிகளில் பாமக போட்டியிடும்.
திமுக தலைமையில் பாமக சிறந்த ஆட்சியை அமைக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து திமுக கூட்டணியின் வெற்றிக்காகபாமக பாடுபடும். தென் மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சி பற்றி அறிவதற்காகவே தற்போது தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டுள்ளேன் என்றார் பொன்னுச்சாமி.












Click it and Unblock the Notifications