தமிழக தேர்தல் ஆணையருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமிக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையராக இருப்பவர் வி.பழனிச்சாமி. தமிழக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு இவருக்குஉண்டு. கடந்த ஆண்டு இவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார். பின்னர் அவருக்கு மாநில அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.இந் நிலையில் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலமும் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து பழனிச்சாமிக்கு மீண்டும் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆளுனர் பர்னாலாவுக்கு பரிந்துரைஅனுப்பியிருந்தது. அதை ஏற்ற பர்னாலா, பழனிச்சாமியின் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பழனிச்சாமி தேர்தல் ஆணையராக நீடிப்பார்.












Click it and Unblock the Notifications