முதல் போணி: திருச்சி போலீஸ் சாதனை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

புத்தாண்டின் முதல் வழக்காக, ஆயுதப் படை காவலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது திருச்சி போலீஸ்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் போலீஸார்தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் திருச்சியிலும் டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நள்ளிரவைத் தாண்டிய நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் ஏராளமான பேர் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்காண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் ஏராளமான பேர் பெரும் கூச்சலுடன், வேகமாக வந்தனர். இதையடுத்து ரவிச்சந்திரன்என்ற போலீஸ்காரர், காரை தடுத்து நிறுத்தி ஏன் வேகமாகப் போகிறீர்கள், மெதுவாகப் போங்கள், கத்தக் கூடாது என்றுஎச்சரித்தார்.

இதையடுத்து உள்ளே இருந்து எட்டிப் பார்த்த இளங்கோ என்பவர், யோவ், நானும் போலீஸ்தான்யா, எனக்கே அட்வைஸா என்றுநக்கலாக கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த ரவிச்சந்திரன், போலீஸ் என்று கூறிக் கொண்டு ஏமாற்றுகிறீர்களா என்று கேட்டு அனைவரையும்காரை விட்டு இறக்கினார். பின்னர் இளங்கோவிடம் அவர் வாக்குவாதம் செய்தார். அப்போது, உண்மையிலேயே இளங்கோபோலீஸ்காரர் என்றும் ஆயுதப் படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் ஊத்தியிருந்ததும் தெரியவந்தது.

ஒரு போலீஸ்காரரே குடித்துவிட்டு ரெளடி மாதிரி ரோட்டில் கத்தித் திரிந்தது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில்காவலர் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் இளங்கோ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருச்சி காவல் துறை வட்டாரத்தில், புத்தாண்டு தினத்தன்று பதிவான முதல் வழக்கே ஒரு போலீஸ்காரருக்கு எதிரானது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ரொம் நல்லாயிருக்கு....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+