சீட் ஒதுக்கீட்டில் கெளரவம் காக்கப்படும்: வைகோ நம்பிக்கை
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் மதிமுகவுக்கு கெளரவமான முறையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புவதாக அக்கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.அவர் கூறுகையில், நாங்கள் கூட்டணியை விட்டு விலக மாட்டோம். திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய தீவிரமாகபாடுபடுவோம்.
சட்டசபைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை உறுதியாக கூற முடியாது. இருப்பினும், எங்களதுகெளரவம் கெடாத வகையில், மதிமுகவுக்குஇடங்கள் ஒதுக்கப்படும் என திடமாக நம்புகிறேன்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இன்னும் கட்சித் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைதொடங்கவில்லை. அதற்கு அவகாசம் இருக்கிறது.
கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற கோட்பாடுகள் குறித்து சிந்தனையே மதிமுகவிடம் இல்லை. எனவே அதை வலியுறுத்தமாட்டோம்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. யாராலும் (விஜயகாந்த்தை மறைகமாக குறிப்பிட்டு) கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தமுடியாது.
சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டே கடந்த சில மாதங்களாக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார்ஜெயலலிதா. வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதிலும் கூட அரசியல் புகுத்தப்பட்டு விட்டது வேதனையைத் தருகிறது.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனை பொய்யான வழக்கில் கைது செய்ததோடு மட்டுமல்லாமல், குண்டர்சட்டத்திலும் கைது செய்திருப்பது மிகவும் கொடுமையானது.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்தைப் போல, தேவாலயங்களிலும் அன்னதானத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதேவாலயங்களின் புனிதத்தைக் கெடுப்பதாக அமைந்திருப்பதாக பிஷப்புகள் கவுன்சில் தெரிவித்துள்ளது. அவர்களது கவலைகுறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
மதிமுகவின் வளர்ச்சி குறித்து கடந்த 8 மாதமாக ஆய்வுகள், சுற்றுப்பயங்கள், ஆலோசனைகளை நடத்தியுள்ளேன். இந்தசுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது. இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து, திராவிட இயக்கப் பாசறைப் பயிற்சியைநடத்தியுள்ளோம்.
சமீபத்தில் டெல்லி வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் இந்தியத் தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கைவிடுதலைப் புலிகளுக்கு விரோதமானதாக உள்ளது. போர் நிறுத்த விதிகளைக் கடைபிடிக்குமாறு புலிகளுக்கு அறிவுரை சொல்லும்அந்த அறிக்கையில், ராணுவத்தின் விதி மீறல்கள் குறித்து சத்தமே இல்லை.
இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கினால் அது அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற முடிவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்எடுத்தார். அதை அப்போது காங்கிரசும் ஆதரித்தது. இதனால் ஆயுதம் வழங்கும் விஷயத்தில் காங்கிரஸ் அரசு தனது நிலையைமாற்றிக் கொள்ளக் கூடாது.
புலிகளுக்கும் ராணுவத்தும் இடையிலான மோதலுக்கு இலங்கை அரசு தான் முழுக் காரணம். வட கிழக்கில் சுனாமி நிவாரணப்பணிகளை புலிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டத்தைக் கூட சிங்கள இனவாத புத்த மதத் தலைவர்களின் நெருக்குதலால்கைவிட்டுவிட்டது அரசு.
சுனாநி தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications