For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட்டில் தமிழர்கள் புறக்கணிப்பு: சென்னையில் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Murali Karthik இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் இந்துமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் மும்பையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. பின்னர் இது கொஞ்சம்குறைந்தது. இப்போது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் இடம் பெற்றுவருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்துக்குப் பிறகு (அவருக்குமுன்பாகவும் பெரிய அளவில் யாரும் இடம் பெறவில்லை) தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்படவில்லை.

ராபின் சிங் மட்டுமே (அவர் தமிழர் இல்லை என்பதாலோ, என்னவோ!) கொஞ்ச காலம் அணியில் நிலையாக இருந்து வந்தார்.

அப்படியே எடுத்தாலும் ஒரு போட்டியில் ஆட விடுவார்கள், அடுத்து 10 போட்டியில் சேர்க்க மாட்டார்கள். சமீபத்தில்தமிழகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் எல்.பாலாஜிக்கு அணியில் இடம் கிடைத்தது. அவரும் தனது திறமைகளைஅபாரமாக வெளிப்படுத்தி நல்ல வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வந்தார்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது அந்நாட்டு பேட்ஸ்மேன்களை மிரள வைத்ததோடு மட்டுமல்லாது, பாகிஸ்தான்ரசிகர்களையும் தனது திறமையான பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கால் கவர்ந்தார்.

Balaji ஒரு வழியாக நீண்ட நாளைக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கும் நிலைஉருவாகியுள்ளதாக தமிழக மக்கள் சந்தோஷப்பட்டனர்.

ஆனால் வந்தது பாலாஜிக்கு வினை. அவருக்கு உடம்பு சரியில்லை என்று கூறி பாலாஜிக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். மீண்டும்அவர் அணிக்கு வருவாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. இதே கதிதான், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கதையும்.

அட்டகாசமாக கீப்பிங் செய்யும் தினேஷ், நல்ல பேட்டிங்கையும் வெளிப்படுத்தினார். நல்ல பார்மில் இருந்தும் கூட அவர்திடீரென அவருக்கு கல்தா கொடுத்து விட்டு டோணியை புகுத்தினர். அவரது நல்ல நேரம், பேட்டிங்கில் அபாரத் திறமையைவெளிப்படுத்த இப்போது தினேஷை சுத்தமாக மறந்து விட்டார்கள்.

ஆனால் அதேசமயம், சுத்தமாக பார்மிலேயே இல்லாத குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை மறக்காமல்அணியில் சேர்த்துள்ளனர். காரணம் குஜராத் தொழிலதிபர்கள் லாபி.

அதே போல கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவியில் இருக்கும் நாயர், கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்தை அணியில் புகுத்திவிட்டார்.

அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் ரயில்வே அணியில் விளையாடி வரும் சுழற் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்குக்கும்அணியில் நிலையான இடம் கிடைப்பதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறையில் பெரும் பாரபட்சம் காட்டப்படுவதாகவுகம், திறமையுள்ள தமிழக வீரர்களுக்குஅநீதி இழைக்கப்படுவதாக பல ன்னணி கிரிக்கெட் வீரர்களே பலமுறை வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ்-பாஜகவை விட அழகாகவே அரசியல் நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இதையெல்லாம்கண்டுகொள்வதே இல்லை. (ஆனால், சென்னையில் போட்டியே நடத்தாமல் ரசிகர்களிடமிருந்து பணத்தை மட்டும் பக்காவாககறந்து விடுவார்கள்). பாலிடிக்சில் அவர்கள் ரொம்ப பிஸி.

Dinesh Karthik செளரவ் கங்கூலியை நீக்கி, மேற்கு வங்கத்தில் போராட்டம் வெடித்த பிறகு வேறு வழியில்லாமல் அணியில் சேர்த்தார்கள்.ஆனால், தமிழகத்தில் கிரிக்கெட் வீரர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை.

இந் நிலையில் தான் கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து இந்துமக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின் மாநிலச் செயலாளர் குமார் கூறுகையில், மொழி அடிப்படையில், மாநிலஅடிப்படையில், ஆதிக்க அடிப்படையில் அணித் தேர்வு நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, திணேஷ் கார்த்திக், முரளிகார்த்திக், ஜேசுதாஸ் போன்ற பல வீரர்கள் அணியில் சேர்க்கப்படாமல் பந்தாடப்படுகிறார்கள்.

வருகிற உலகக் கோப்பைக் கிரிக்கெட் அணியில் திறமையுள்ள தமிழர்களை சேர்க்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பிற கட்சியினரையும் கூட்டு சேர்த்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினார்.

பின் குறிப்பு: அனுமதியின்றி இந்தப் போராட்டம் நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் போலீஸார் கைதுசெய்துவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X