For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுக்கு கை கொடுக்குமா திருச்சி ராசி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்சியில் நடந்த 8வது மாநில மாநாட்டுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியை மனதில்கொண்டே 9வது மாநில மாநாட்டை மார்ச் மாதம் திருச்சியில் நடத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டசபைத் தேர்தலை எப்போது நடத்தலாம் என்றஆலோசனையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியில் விரைவில் வெளியாகவுள்ளது.

தேர்தல் ஆணையம் இப்படி ஒரு பக்கம் விறுவிறுப்பாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக தேர்தலை சந்திக்கதயாராகி வருகின்றன. குறிப்பாக திமுக தேர்தலை மனதில் வைத்து பல திட்டங்களை அடுத்தடுத்து களமிறக்கவுள்ளது.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் பிரசாரக் கூட்டங்களை நடத்த திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும்18ம் தேதி முதல் இந்தப் பிரசாரம் தொடங்குகிறது.

அடுத்தாக திருச்சியில் மார்ச் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திமுக தயாராகிவருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முன்பாகவும்திருச்சியில் மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தியது திமுக.

இந்த முறையில் செண்டிமெண்டாக திருச்சியில் மாநாடு நடத்தும் திமுக, அப்படியே திமுக இளைஞர் அணியின் வெள்ளிவிழாவையும் நடத்தவுள்ளது. இது ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழாவாக அமையும் என்று திமுகவினர் மத்தியில்பேச்சு நிலவுகிறது.

திருச்சி மாநாட்டுக்கு முன்பாகவே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை திமுக முடித்து விடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மாநாட்டில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கருணாநதி அறிவித்துள்ளார்.

அதேசமயம், வேட்பாளர் பட்டியலையும், தொகுதி உடன்பாட்டையும் அப்போதே கருணாநிதி அறிவிக்கக் கூடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவைப் பொருத்தவரை தான் போட்டியிடப் போகும் தொகுதிகளை இறுதி செய்துவிட்டதோடு வேட்பாளர்களையும் முடிவுசெய்து வைத்து விட்டதாகக் கூட ஒரு பேச்சு நிலவுகிறது.

திருச்சி மாநில மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் கலந்து கொள்ள வைக்க திமுக முடிவு செய்துள்ளது.முடிந்தால் சோனியா காந்தியையும் அழைக்க திமுக முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.

திருச்சி மாநாட்டின்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால் இந்த மாநாட்டை மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாக திமுக கருதுகிறது.எனவே இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடத்திக் காட்டவும் திமுக தீவிரமாகஉள்ளது.

திமுக இப்படியென்றால், வெள்ள நிவாரணம் என்ற பெயரிலேயே தனது பிரச்சாரத்தை அதிமுக துவக்கி விட்டது. வீட்டுக்குள்வெள்ளம் வந்ததோ இல்லையோ, அந்த ஏரியாவில் வெள்ளம் வந்திருந்தாலே போதும், ரேஷன் கார்டுடன் போனால் ரூ. 2,000,10 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் என வந்தவர்கள் அனைவருக்கும் வாரி வழங்கி வருகிறது அதிமுக அரசு.

இதில் கீழ்மட்டத்தில் நடந்த குளறுபடிகளால் தான் பல குடும்பங்களுக்கு நிதியுதவி போய்ச் சேரவில்லையே தவிர, பாதிக்கப்பட்டபகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் (பாதிப்பை சந்தித்திருக்காவிட்டாலும்) உதவித் தொகை போய்ச் சேர வேண்டும் எனஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வசதி படைத்தோர், இல்லாதோர் என்ற வித்தியாசமே இல்லாமல் ரேசன் கார்டுடன் வந்து நிற்போர் அனைவருக்கும் ரூ.2,000த்தைத் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை எல்லா வீடுகளுக்கும்நிவாரணமாக அரசு வழங்கியதே இல்லை.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த நிவாரணத்தை நினைவுபடுத்தியே தனது பிரச்சாரத்தை முன் வைக்கவுள்ளது அதிமுக.

அத்தோடு தமிழக அரசு கேட்ட ரு. 13,000 கோடிக்குப் பதிலாக வெறும் ரூ. 1,000 கோடி தான் மத்திய அரசு தந்துள்ளது. இதற்குதிமுக, காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களே காரணம் என்று பிரச்சாரம் செய்யப் போகிறது அதிமுக.

ரூ. 13,000 கோடி வந்திருந்தால் உங்களுக்குத் தரப்பட்ட நிவாரணத் தொகையும் பல மடங்காக இருந்திருக்கும் என்று மக்களிடம்எடுத்துச் சொல்லத் திட்டமிட்டுள்ளது அதிமுக.

இதனால் மக்களின் வெறுப்பை திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக சம்பாதிக்கும் என அதிமுக நினைக்கிறது. இந்தப் பிரச்சாரத்தைதிமுக கூட்டணி எப்படி சமாளித்துக் கரையேறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X