சென்னை விமான நிலையத்தில் மர்ம கார்கள்-பீதி
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் கடந்த 6 நாட்களாக கேட்பாரின்றி நின்ற இரண்டு கார்களால் பெரும் பீதி ஏற்பட்டது.
பெங்களூர் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர். சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் இரண்டு கார்கள் கேட்பாரின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போலீஸாருக்குத் தகவல் போனது.
உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அந்தக் காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்குமா என்பது குறித்து சோதனை செய்ய முடிவுசெய்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து காரை பரிசோதனை செய்தனர். அவற்றில் குண்டு எதுவும் இல்லை.
இதையடுத்து நடந்த விசாரணையில் இரண்டு கார்களில் ஒன்று மதுரையைச் சேர்ந்த கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றுதெரிய வந்துள்ளது. இந்தக் காரை இங்கு விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்னொரு கார் யாருடையது என்று தெரியவில்லை.
பிடிபட்ட 2 பேர் விடுவிப்பு:
இதற்கிடையே, பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக சென்னையில், பெங்களூர் போலீஸாரிடம் பிடிபட்ட 2 பேரைகர்நாடக போலீஸார் விடுவித்து விட்டனர்.
தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆந்திராவில் பிடிபட்ட அப்துல் ரஹ்மான் மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெங்களூர்போலீஸார் சென்னை விரைந்து வந்தனர்.
சென்னையில் குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடம்ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும்கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரையும் பெங்களூர் போலீஸார் விடுவித்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications