தேர்தல் அதிகாரி பதவி நீட்டிப்பு: அரசு பதில் தர கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாநில தேர்தல் அதிகாரியின் பதவி நீட்டிப்பு குறித்து தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஇருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பஞ்சாயத்து சட்டப்படி மாநில தேர்தல் அதிகாரி திருப்தியாக வேலை பார்த்தால் அவருக்கு 2 முறை பதவி நீடிப்பு கொடுக்கலாம்.அதன் படி அவர் 6 ஆண்டுகள் இந்த பதவியில் இருக்கலாம். அதுவும் 62 வயது வரை மட்டுமே பதவி நீடிக்க முடியும்.தற்போதுள்ள தேர்தல் அதிகாரிக்கு இந்த மாதத்துடன் பதவிக்காலம் முடிகிறது. அத்துடன் 62 வயதும் முடிகிறது.

ஆனால் அவரை வயது வரம்பின்றி மீண்டும் பதவியில் நீடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஜனநாயகப்படியும், அரசியல்சட்டப்படியும் தவறானது. போதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தும் 62 வயது ஆனவரை மீண்டும் அதே பதவியில் எப்படி நீடிக்கசெய்ய முடியும். இதனால் மற்ற அதிகாரிகளின் சீனியாரிட்டி பாதிக்கிறது.

எனவே அரசு 2005ம் ஆண்டு வெளியிட்ட இதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்ததலைமை நீதிபதி அரசு துறையில் ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு பதவி நீடிக்க உரிமை உள்ளதா என்று அரசு வழக்கறிஞரிடம்கேட்டார்.

இதற்கான விரிவான பதிலை பிறகு அளிக்கிறேன் என்று அரசு வழக்கறிஞர் ரகுபதி கூறினார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+