இந்துக்களை புண்படுத்தியதாக கருணாநிதி மீது புதிய வழக்கு
சென்னை:
இந்துக்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக திமுக தலைவர்கருணாநிதி மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து என்றால் திருடன் என்று ஒரு பொருள் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசினார். கருணாநிதியின்இந்தப் பேச்சு இந்துக்களை அவமதிப்பதாக உள்ளதாக கூறி எழும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.இந்த நிலையில் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2002ம் ஆண்டு வளசரவாக்கத்தைச் சேர்ந்த கெளதம் என்பவர்மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் ஏற்கனவே எழும்பூர் காவல் நிலையத்தில் இதே போன்ற புகார்ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி கெளதமின் புகார் மனுவை ஏற்க போலீஸார் மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் கெளதம். தான் புகார் கொடுத்தும் இதுவரை போலீஸார் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை என்று அதில் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் புகாரில் முகாந்திரம்இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கெளதம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத உணர்வை புண்படுத்துவது போல பேசுதல், வார்த்தைகளால்புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கருணாநிதி மீது மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கருணாநிதி மீது சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல், அமராவதி ஆற்றுப் பாலம் இடிந்ததுதொடர்பான வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications