ரேஷன் மானிய ரத்து: மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை ரத்து செய்துள்ள முடிவை மத்திய அரசு உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இன்று பேக்ஸ் மூலம்அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், வறுமைக் கோட்டுக்கு மேலேஉள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களுக்கான மானியத் தொகையைக் குறைக்கக் கூடாது.மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் விநியோகத்தின் அளவையும் குறைக்கக் கூடாது. இதுதொடர்பாகமத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து எனக்குத் தெரிய வந்தவுடனேயே நான் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை தொடர்புகொண்டு பிரதமரை சந்திக்கும்படி கோரினேன். அதன் படி நாளை டி.ஆர்.பாலு பிரதமரை சந்தித்துக் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
திமுகவைப் பொருத்தவரை, ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறவைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போகிப் பண்டிகையன்று சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டியிருப்பது தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி,அவமானப்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications